சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு என்னை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வப்போது சிலிண்டர் விலையில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்படும். தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் 41 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையில் 1921 ரூபாய் 50 காசுகளுக்கு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை பெறவில்லையா? - வெளியானது முக்கிய அப்டேட்!

ஆனால், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தலைவன் கொடி பறக்குது! மாலை வரும் விஜய்க்காக காலையே குவிந்த தொண்டர்கள்...மதுரை ஏர்போர்ட் பிளாக்...