கோவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் என நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிற்பகலில் அகிலனின் தாயார் கௌசல்யா வீட்டுக்கு வந்த போது மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவம் குறித்து கௌசல்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது மகன் படித்து வரும் பள்ளியில் சாதி ரீதியாக பேசியதாகவும், இதனால் மன உலைச்சலில் இருந்த அகிலன் தற்கொலைக்கு அவருடன் படித்த சக மாணவர்கள் இருவர், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்கு பேர் காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: #BREAKING கோவையில் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலையில் திடீர் திருப்பம்... பள்ளியில் சாதி ரீதியாக தொல்லையா?
இதனையடுத்து பீளமேடு போலீசார் ஆசிரியர்கள், மாணவர்கள் என 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறையில் “யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்” என ஆசிரியர் விஜயகுமார் கேட்டதாகவும், அப்போது இருந்தே மாணவர்கள் இருவர் அகிலனை சாதிப்பெயர் சொல்லி திட்டியும், அடித்தும் வந்துள்ளனர் எனவும், தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர் அகிலனின் மரணத்திற்கு சாதிய பிரச்சனையே காரணம் எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மாணவர் அகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ எஸ் ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேதப் பரிசோதனை நடைபெறுகின்றது.
இதையும் படிங்க: பேஷ்! பேஷ்! அறிவுலகத்திற்கே லீவு விட்ட அறிவார்ந்த ஆட்சி தவெக ஆட்சி! TRB ராஜா கடும் தாக்கு..!!