இளைய தலைமுறையினர் தற்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொன்விழா மற்றும் 39-வது பட்டமளிப்பு விழாவில் இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய போது, சத்தியமே ஜெயம் என்ற காந்திய வழியைச் சுட்டிக்காட்டினார். "உலகில் எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியனே அஸ்தமனம் ஆவதில்லை" என்று மார்தட்டிய ஆங்கிலேயப் பேரரசை, மகாத்மா காந்தி ஆயுதமின்றி வெறும் கைத்தடியை மட்டும் ஏந்தி நின்று அடிபணியச் செய்தார். எந்த இடத்தில் சத்தியம் உள்ளதோ, அங்கேதான் வெற்றி நிரந்தரம் என்பதை காந்தியின் வாழ்க்கை பறைசாற்றுகிறது.

கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்ற காந்தியக் கொள்கை என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுப் புதிய வாழ்வை அடைந்துள்ளனர் என்றும் ஜல் ஜீவன் இயக்கம் மூலம் பல கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பசும்பொன்னில் குவியும் தலைவர்கள்.! துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர் மரியாதை.!!
இளைய தலைமுறையினர் தற்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்றும், தங்களை மட்டுமின்றி தங்களைச் சார்ந்த சமூகத்தையும் போதைப்பொருள் இல்லாச் சமுதாயமாக உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். புதிய கண்டுபிடிப்புகளையும் நவீன திறன்களையும் ஏற்றுக்கொண்டு முன்னேறும் அதே நேரத்தில், நமது பண்பாட்டையும் மனிதநேயப் பண்புகளையும் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!