கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், அந்த ஊர்வலத்தில் தீண்டாமை நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடும் விநாயகர் சிலையை பொதுவழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதாகவும், சாதி இந்துக்களின் தூண்டுதலின் பேரில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.