தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ள நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். எங்களை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லையென அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பறிபோன அதிகாரம்: சி.வி. சண்முகம் வாதம்கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் கூறியதாவது:அதிகாரம் செல்லாது: "எப்போது கட்சிக்குள் முரண்பாடுகள் வந்துவிட்டதோ, அன்றிலிருந்தே பொதுச் செயலாளருக்கான அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது" என அவர் அதிரடியாகத் தெரிவித்தார். நீக்கம் செல்லாது: எங்களை நீக்குவதற்கான அதிகாரம் அவருக்குத் துளியும் இல்லை என்றும், எங்களை நீக்கியது செல்லாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் உச்சகட்ட மோதல்ஏற்கனவே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் சட்ட விதிகளுக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி முக்கிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து விடுவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!
ஆனால், இந்த அறிவிப்புகளை அடியோடு மறுத்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் போர், அக்கட்சியைப் பிளவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதோடு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!