நாளை வரை 144 தடை... 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் பசும்பொன்... டாஸ்மாக் கடைகள் மூடல்...!
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமுதி, முதுகுளத்துார் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் 118வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை விழா அக்.,28 முதல் கொண்டாடப்படுகிறது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: ஆத்தாடி!! ரூ.2 கோடியே 76 லட்சமா?... கூலித்தொழிலாளிக்கு வந்த ஜி.எஸ்.டி. கடிதத்தால் பரபரப்பு...!
எனவே பசும்பொன்னில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 1 DIG தலைமையில் 20 SP கள், 27 ADSP,80 DSP தலைமையில் 8ஆயிரம் போலீசார் பாதுகாப்பு, மாவட்டத்தில் 38 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பசும்பொன்னில் மட்டும் 350 CCTTV கேமராக்கள், மாவட்டம் முழுவதும் உள்ள தாய் கிராமங்களில் நான்காயிரம் சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அதை அனைத்தும் பசும்பொன்னில் உள்ள மினி கண்ட்ரோல் சென்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாடகை வாகனங்களில் பொதுமக்கள் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும், வாடகை வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் காவல்துறையால் விதிக்கப்பட்டுளனர்.
போலீசாரின் ட்ரோன் கேமராக்கள் VVIP வந்து சென்ற பிறகு இயக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்
பசும்பொன் விழாவிற்கு செல்வோரின் வசதிக்கேற்ப கிராமங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சொந்த வாகனங்களில் வருபவர்கள் வெளிப்புறத்தில் தொங்குவது, கூரையின் மீது அமர்ந்து பயணிப்பது, வெடி வெடிப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது. மேலும், சமுதாய ரீதியிலான கோஷங்களை எழுப்பக்கூடாது.
விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்களில் பாதுகாப்பு பணிக்காக 2 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணம் செய்பவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க உடையில் அணிந்து கொள்ளும் 300 பிரத்யேக கேமராக்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பசும்பொன் பகுதியில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 57 டூவீலர்கள், 53 கார்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து பள்ளிகள் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்றைய தினம் கீழடி அருட்காட்சியகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
மதுரையில் இருந்து வரும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டிணம் வழியாக இராமநாதபுரத்திற்கு இயக்கப்படும்.
இராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இராமநாதபுரம், தேவிபட்டிணம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்கப்படும்.
மேலும் பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளுக்குள் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் வர அனுமதி கிடையாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: SIR - ஐ எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பது ஏற்க முடியாதது... சுத்த விடப் போறாங்க! MP மாணிக்கம் தாகூர் பேட்டி...!