திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் இராசராசச் சோழனின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாபெரும் உயரங்களை எய்தி தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன் என அவர் குறிப்பிட்டார்.
அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட 2022ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்தார். துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திராவிட மாடல் ஆட்சியில் விதை ஊன்றப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த விதை மரமாகிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!
இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேற வேண்டும் என்றும், அரசர்க்கரசரின் புகழ் வாழ்க என்றும் அவர் வாழ்த்தினார்.சோழப் பேரரசின் பொற்காலத்தை உருவாக்கிய இராசராசச் சோழனின் நினைவுகளைப் போற்றும் இந்த விழா, தமிழர் வரலாற்றின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக அமைய வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் தேங்காததற்கு திமுக ஆட்சியே சான்று: தவெக அரசு மீது தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் காட்டம்!