தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தனது உரையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதியை விட, தற்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மூன்று மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தக் கூற்று, தமிழகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் கவனம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

இந்தத் தொகை, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகமானது என்ற அவரது கூற்று, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறித்து முக்கியமான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தரப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுத்துள்ளோம் என்கிறார் பிரதமர்., 2004 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் வித்தியாசம் இல்லையா என்றும் பணத்தின் மதிப்பானது ஒன்றா எனவும் திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் போது தமிழ்நாட்டுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறப்புத் திட்டங்கள் வந்ததாகவும் அத்தகைய சிறப்புத் திட்டம் எதையாவது பாஜக அரசால் பட்டியல் போட முடியுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் பொய்களை சுமந்து விமானத்தில் வந்ததாகவும் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடல் இல்ல... FAILURE மாடல்! திமுகவை விளாசிய இபிஎஸ்..!