தமிழக அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து வெடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக அமைச்சரும் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, 2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேச்சின்போது ஆதவ் அர்ஜுனா, திமுகவின் வெற்றி முழுக்க முழுக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது என்று வாதிட்டார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இல்லாமல் போயிருந்தால், சேப்பாக்கம் தொகுதியிலேயே திமுக தோல்வியைத் தழுவியிருக்கும் என்று அவர் தெளிவாகக் கூறினார்.

மேலும், கூட்டணி இல்லாமல் திமுக தனியாகத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், எந்தக் காலத்திலும் எதிர்க்கட்சியாகக்கூட அது உருவாகியிருக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கே விபூதி அடித்த மும்பை ஆசாமி... ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் போலீசில் பரபரப்பு புகார்...!
தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, சுமார் 30 தொகுதிகளில் திமுக 10,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், அந்த வாக்குகள் பெரும்பாலும் கூட்டணிக்ட்சிகளின் பங்களிப்பால் வந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் தங்கள் முடிவுகளை எடுத்தபோது, திமுக அவர்களைத் திட்டிய விதம் அனைவருக்கும் தெரியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!