தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் வெட்டிக் கொலை செய்தது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டுச் சென்ற சிறுவன் காணாமல் போனது, கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாதிப் பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டது போன்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளைப் பார்க்கும்போது, திரு. விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் அனைவரும் தங்களை லியோ தாஸ் போல நினைத்துக்கொண்டு வலம் வருகிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கொள்கை, கூட்டணி என எல்லாவற்றிலும் சமூகநீதி என்று பெயர் வைத்துக்கொள்ளும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் சாதிப் பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்திருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேடைகளில் பேசப்படும் டயலாக்குகள் எல்லாம் இப்போது எங்கே போயின என்றும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து ஊத்தங்கரை சிறுவன் காணாமல் போயிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில் செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை என்றார்.
இதையும் படிங்க: சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!
தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்குக் கொஞ்சமாவது புரியுமா என்று கேள்வி எழுப்பினார். இது ஒரு பேட்டர்னாக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா என அவர் வினவினார்.சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமான சிறுவர்களை மீட்டு இந்த விவகாரத்தைத் தீவிரமாக அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரசை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அநாகரிக பேச்சு..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு... அதிமுக திட்டவட்டம்..!!