தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் செஞ்சி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பதவியேற்ற நாள் முதலே தவெக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதாகவும், பெண்களின் பாதுகாப்பில் தோல்வியடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாணைகளை பிறப்பித்து ரத்து செய்வது போன்ற நிர்வாகக் குளறுபடிகள் தொடர்வதாகவும், மின்வெட்டு பிரச்சினை உள்ளிட்ட பல சிக்கல்கள் வரிசையாக எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பிலும் அரசு தோல்வி அடைந்திருப்பதாக அவர் விமர்சித்தார்.செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் நிலவரம் இன்னும் தெளிவாகத் தெரியாமல் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காணாமல் போன குழந்தைகள் பின்னர் மீட்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் தொடர்வது கவலைக்குரியது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.குழந்தைகள் தினத்தில் கேக் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தும் அரசு, அவர்களின் பாதுகாப்பில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காதது கேள்விக்குறியாக உள்ளது.
இதையும் படிங்க: வன்முறை களமா தூத்துக்குடி.? வேடிக்கை பார்க்கும் அரசு..! கொந்தளித்த வேல்முருகன்.!!
இந்த அரசு எதைத்தான் முழுமையாக செய்துள்ளது என்ற கேள்வியை மக்கள் முன்வைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.மழை வெள்ள நீரில் சென்று ரீல்ஸ் படமெடுப்பதை நிறுத்திவிட்டு, முதலில் மழலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதே இப்போதைய முதன்மை தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காமராஜர் ஆட்சியே இலக்கு..! சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கு..! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி..!