கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 3 இளைஞர்கள் அவரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்து விரட்டப்பட்ட நிலையில், ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு போலீசார் மாணவியை மீட்டனர். 
மாணவியை கூட்டுப்பாலில் கொடுமை செய்து தப்பி ஓடிய மூவரை பீளமேடு காவல்துறை இடத்தில் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்தன. சம்பவம் நடந்த இடத்தில் காரில் இருந்து துப்பட்டா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் தடையவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 3 பேர் போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். அவர்களைப் பிடிக்க முயன்ற காவலர் சந்திரசேகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிடிபட்ட மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள். மேலும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளன. இதனிடையே, பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என திமுக தெரிவித்துள்ளது. கோவையில் கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு? அண்ணாமலை கிட்ட விசாரிக்கணும்! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!
சட்டத்தின் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் விரைவாக தண்டிக்கப்படுவார்கள் என்று . மாநிலங்களில் நடக்கும் அவலச் சம்பவங்களை கண்டும் காணாமல் இருப்பது பாஜக அரசுகளுக்குதான் வழக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும், பெண்கள் பாதுகாப்பில் தி.மு.கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்துக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இது பாலியல் மாடல் ஆட்சி… வாயை திறங்க ஸ்டாலின்..! வாட்டி எடுத்த நயினார் நாகேந்திரன்…!