சென்னையை அடுத்த குரோம்பேட்டை பச்சைமலை பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக மூன்று பேர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடமிருந்து ஒன்பது கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் தாம்பரம் சானிடோரியத்தைச் சேர்ந்த ரகு மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகமத் ஜியாத், அர்ஷத் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவர்களைக் கைது செய்த காவல்துறையினர், போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்தும், யாருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பொதுமக்கள் அதிகம் வந்து போகும் நடைப்பயிற்சிப் பகுதியில் இத்தகைய போதைப்பொருள் விற்பனை முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை படுஜோர்..! மெத்தப்பட்ட மைன் பறிமுதல்..! 2 இளைஞர்கள் கைது.!
இதற்கிடையே காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வரும் நிலையில், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
இதையும் படிங்க: சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!