வங்கக்கடலில் உருவாகி, ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்து வரும் அருணா புயல் காரணமாக, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் ராஜமுந்திரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆறு பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் ராஜமுந்திரி ஆகிய நகரங்களிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய ஆறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அருணா புயல் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படவிருந்த மொத்தம் 12 விமானச் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!
அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.25 மணிக்கு விசாகப்பட்டினத்திற்குச் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 7 மணிக்கு விஜயவாடாவுக்குச் செல்ல வேண்டிய விமானம், காலை 10.30 மணிக்கு விசாகப்பட்டினத்திற்குச் செல்ல வேண்டிய விமானம், பிற்பகல் 2.35 மணிக்கு ராஜமுந்திரிக்குச் செல்ல வேண்டிய விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு விஜயவாடாவுக்குச் செல்ல வேண்டிய விமானம் மற்றும் மாலை 4 மணிக்கு விசாகப்பட்டினத்திற்குச் செல்ல வேண்டிய விமானம் என மொத்தம் ஆறு புறப்பாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் ராஜமுந்திரி ஆகிய நகரங்களிலிருந்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆறு பயணிகள் விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அர்னாப் புயல் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் இன்று வருகை மற்றும் புறப்பாடு என மொத்தம் 12 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 12 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னையிலிருந்து விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புயல் தீவிரமடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவது குறித்து நேற்றே திட்டமிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!