சென்னையில் தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அடையாறு, கிண்டி உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 4 வாகனங்களில் சென்ற அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் முக்கிய புள்ளியின் வீட்டை சுத்துப்போட்ட ED... 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை...!
அதேபோல அடையாறில் உள்ள டாக்டர் இந்திரா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேற்கு மாம்பலம் உள்பட மேலும் 2 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ED வளையத்திற்குள் புதிதாக 3 திமுக அமைச்சர்கள்... திமுகவை சுத்துப்போட்டு கட்டிப்போட பார்க்கும் பாஜக...!