2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமானதாகவும், போட்டி நிறைந்ததாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, புதிதாக உருவாகியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்றவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் வாக்குறுதிகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன அல்லது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. திமுகவைப் பொறுத்தவரை, கடந்த 2021 தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் ஏறத்தாழ 80 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, பொதுமக்களிடம் பெருமிதம் கொண்டாடுகிறது.

இதில் பல நலத்திட்டங்கள், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், இல்லம் தேடி கல்வி போன்றவை தேர்தல் அறிக்கைக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்டவை என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது வாக்குறுதிகள் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்தாங்க லிஸ்ட்... அமித் ஷா வருகை எதிரொலி... ஆளுநர் ரவியை சந்திக்கும் EPS...!
அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது வாக்குறுதி ஒன்றை கொடுத்தார். பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என்ற உறுதியளித்தார். பட்டியல் இனத்தவர்கள் திருமணமாகி தனி குடித்தனம் போகும் போது வீடு இல்லாமல் தவிப்பதாக தகவல்கள் வருவதாகவும் எனவே திருமணமாகி தனி குடுத்தனம் செல்லும் பட்டியலை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்ற உறுதியளிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவங்க கிள்ளுக்கீரையா?.. இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி... திமுகவை தோலுரித்த EPS...!