எடப்பாடி பழனிச்சாமி 1974இல் அதிமுகவில் தொண்டராக இணைந்து, படிப்படியாக முக்கிய பொறுப்புகளைப் பெற்றவர். ஆனால், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தார். 1996 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இத்தேர்தலில் அவருக்கு 28.3% வாக்குகள் மட்டுமே கிடைத்தன, மேலும் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.1999 மற்றும் 2004ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் முறையே திமுக வேட்பாளர்களான கே.பி. ராமலிங்கம் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் தோல்வியடைந்தார். 2006இல் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் வி. காவேரியிடம் 6,347 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்தது, பத்து தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, மேலும் ஆண்டிப்பட்டி போன்ற பகுதிகளில் ஒற்றை இலக்க வாக்குகளைப் பெற்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தத் தோல்வி, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைத்துவத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் "10 தோல்வி பழனிச்சாமி" என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை திமுகவினர் தொடர்ந்து பத்து தோல்வி பழனிச்சாமி என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் தோல்விகளையும் அதன் விவரங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கி திரிந்து ஏமாற்றியது போதாமல், துண்டு சீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது என்றும் பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா என்ற சரமாரியாக கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, 2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே என்றும் அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தோல்வி, புதுக்கோட்டை இடை தேர்தலில் டெபாசிட் கூட தேறாது என போட்டியிடாமல் ஓடியது திமுக என்று சாடினார்.
தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் திமுகவின் தோல்விகளை பட்டியலிட்ட அவர், ஒரு ஓட்டை சைக்கிளை தூக்கிக்கொண்டு எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை என்று ஊர் ஊராக ஓட்டிச் சென்று தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும் மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்லை என்றார். இப்படியெல்லாம் ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #BYEBYE STALIN கதற விடுது! இன்னும் கதற விடுவோமா? அடித்த தூள் கிளப்பும் இபிஎஸ்!
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்! நிரந்தரமா குட்பை சொல்ல போறாங்க... இபிஎஸ்ஐ வகுந்தெடுத்த ஸ்டாலின்..!