எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஒன்றியம் வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஒன்றாக கூடி அந்தந்த கிராமத்தின் பெயரைச் சொல்லி 6 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை பங்கிட்டு கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு இருந்தார்.
இதற்கு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கந்தர்வோட்டையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு சென்றவுடன் சிறிது நேரத்திலேய கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த அதிமுகவின் பல்வேறு ஒன்றியங்களுக்கும் தலா 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. சுற்றுப்பயணம் என்ற பெயரில் ஊர் ஊராக சென்று முட்டுசந்துகளில் நின்று அதிக கூட்டம் இருப்பதாக காட்டிக் கொண்டு வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கும் பழனிசாமியின் தில்லுமுல்லு வேலைகள் அம்பலமாகி உள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க: "பதில் சொல்லுங்க அப்பா"... திமுக பிரதமர் வீட்டு கதவை தட்டினால் நியாயமா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
தன் பேச்சையும், தன் முகத்தையும் மக்கள் பார்க்க விரும்பாத காரணத்தால் பழனிசாமி தான் பகுதிகளுக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினரை வைத்து கட்டு கட்டாக பணத்தை பட்டுவாடா செய்யும் வீடியோ வெளிவந்துள்ளது. இதன் மூலமாக பத்து தோல்வி பழனிசாமியின் முகத்திரை கிழிந்து விட்டதாக விமர்சித்து உள்ளது. மூட்டை மூட்டையாக பணத்தை கட்டிக்கொண்டு ஊர் சுற்றும் சுந்தரா ட்ராவல்ஸ் பழனிசாமி என்றும் திமுக தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவை அக்கு, அக்கா பிரிச்சி போட்டுடுவாங்க... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த திருமா...!