காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 10,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது,
500 கன அடி தண்ணீர் பாசனத்திற்கும், மீதமுள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது,
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது பத்தாயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்ததன் காரணமாக இரண்டாவது நாளாக அப்பகுதி வீடுகளில் சுமார் ஒரு அடி வரை தண்ணீர் உயர்ந்துள்ளது, இதன் காரணமாக அப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: உங்களுக்கு எங்க வலிக்குது... பாகிஸ்தானை காப்பாத்துறீங்களா? காங்கிரசை பந்தாடிய அமித் ஷா
தண்ணீர் வீடு வாசல் வரை வந்ததன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மைலம்பாடி குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விட்டனர்,
குடியிருப்புகளுக்கு பணம் கட்ட முடியாதவர்கள் மட்டும் வீடுகளில் இருந்து வெளியேறி அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் அரசு அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் வந்து பார்வையிட்டு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடந்த தாக்குதல்.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்..