முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான பணி நியமன முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் உத்தரவுக்கு எதிராக கே.என்.நேரு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது பெரும் தொகை லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 2,538 பணியிடங்களுக்கு ரூ.634 கோடி அளவில் பணம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல்கள் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் வாதிட்டார். ஆனால் உயர்நீதிமன்றம் அவரது மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க: பழைய மீட்டருக்கு குட்பை.! ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்..! தமிழக அரசு நடவடிக்கை..!!
இதையடுத்து அந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் தரப்பையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பதே இந்த மனுவின் நோக்கமாகும்.
இதையும் படிங்க: கல்யாண மண்டபம் முதல் மால் வரை! கட்டிட அனுமதிக்கு சாலை அகல விதிகள் என்ன.? தமிழக அரசு அரசாணை வெளியீடு.!