தேவர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக வருவதை டிடிவி ஈகோ விரும்பவில்லை என்றும் தேவர் சமூகத்தின் தலைமை முகமாக மட்டுமே இருக்க விரும்புகிறார் டிடிவி என அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டினார். TTV தினகரன் சக தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இழிவாகப் பார்க்கிறார் என்று கூறிய அவர், அண்ணாமலையை நயினார் என்று மாற்ற டிடிவி விரும்புகிறார் என்றும் இது திமுக திட்டம் எனவும் கூறினார். அதேபோல் இரண்டு கவுண்டர் தலைவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில் ஈகோவைத் தூண்ட விரும்புகிறார் டிடிவி தினகரன் எனவும் இதுவும் திமுகவின் திட்டம் தான் என்றும் குற்றம் சுமத்தினார்.
அண்ணாமலை தனது திமுக மாஸ்டர் சபரீசனிடம் விளையாடுகிறார் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு வலுவான தலைவர் இல்லை., அவர்கள் செங்கோட்டியனை இழுக்கிறார்கள் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி திமுகவிற்கு உதவ சமூக மோதல்களைக் கொண்டு வருகிறார் எனவும் சாடினார்.

கூட்டணி பற்றிப் பேசவோ, என்டிஏ உடன் கூட்டணி வைக்கவோ தெரியாத டிடிவி தினகரன், அண்ணாமலையை அமமுக -வின் தலைவராகவும், எம்ஜிஆர் காலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான செங்கோட்டையனை அமமுக-வின் துணைத் தலைவராகவும் ஆக்குவார் என்றும் டிடிவி அமமுகவின் உறுப்பினர் நிர்வாகியாகவோ அல்லது அமமுக-வின் வெறும் தொண்டராகவோ மாறுவார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: தொடரும் இபிஎஸ் வேட்டை… சத்யபாமா கட்சிப்பதவி பறிப்பு! அதிரடி அறிவிப்பு
விகே சசிகலா, டிடிவி ஓபிஎஸ் மற்றும் அமமுக-வில் உள்ள மற்ற தலைவர்களிடையே செங்கோட்டையன் ஒற்றுமையைக் கொண்டுவரட்டும்., அண்ணாமலை எங்கு பிரச்சாரம் செய்தாலும் கட்சி தோற்றுவிடும் என்றும் இந்த முழு திமுக நாடக உத்தியை எதிர்த்து நிற்க உறுதியாகவும் வலிமையாகவும் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே என்றும் கூறினார்.
இதையும் படிங்க: என்னப்பா நடக்குது? செங்கோட்டையன் வீட்டின் முன்பு திரளும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!