திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 01ம் தேதி வீட்டிலிருந்த மாணவி திடீரென தலைமறைவானார்.
பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த மாணவியின் செல் போனை பெற்றோர்கள் எடுத்துப் பார்த்தபோது கரூரை சேர்ந்த கார்த்திக் வயது 22 என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது கார்த்திக் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!
கார்த்திக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் யோகேஷ் வயது 22 மற்றும் 17 வயது சிறுமி என 3 பேரையும் போலீசார் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கார்த்திக் சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சிறுமியை கார்த்திக் கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் யோகேஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: “நள்ளிரவில் ஆபாச SMS’’... அம்பலமான கல்லூரி வார்டனின் லீலைகள்... மாணவிகளை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம்...!