நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? மு.க.ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!!

அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்தார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டால் NO WORK - NO PAY என்ற அடிப்படையில் ஊதியப்படுத்தும் செய்யப்படும் என்று கூறியிருந்தார். மேலும், பகுதி நேர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து சாலையில் அமர்ந்து போராடியவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா? இபிஎஸ் சாடல்