பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பெண்களிடம் நட்பு ரீதியில் பழகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே டியூஷன் படிக்கச் சென்ற 16 வயது சிறுமிக்கு பாலில் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்குகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். டியூஷனுக்கு சென்ற மாணவிக்கு பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடப்பாவி... தேவாலயத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... போக்சோ வழக்கில் பாதிரியார் கைது...!
டியூஷன் முடித்து வீட்டுக்கு கிளம்பிய சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு பைக்கில் ஏறுமாறு மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் முருகனை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அடப்பாவிகளா... இளம் பெண்ணை நண்பனோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த காதலன்... லாடம் கட்டிய போலீஸ்...!