தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராகவும், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் பயணித்து வருபவர் விஜய். 1974 ஜூன் 22 அன்று பிறந்த விஜய், 1984இல் தனது 10வது வயதில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம் போன்ற படங்களில் குழந்தை நடிகராக பங்களித்தார். மேலும், 1992இல் நாளைய தீர்ப்பு மூலம் முதன்மை நடிகரானார். பிறகு அடிமேல் அடிவைத்து தளபதி என்ற பட்டத்துடன் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார்.

பிறகு அரசியலில் குதித்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி கலக்கி வருகிறார். இன்று தனது 51 வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு அனைவரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு குழு செயலாளர் அருண்ராஜ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி உள்ளார்.
இதையும் படிங்க: தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!

அவரின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புத் தலைவா. எண்ணியவர் திண்ணியராகப் பெறின் எண்ணம் பல வண்ணம் பெறும் என்ற வள்ளுவன் வாக்கில், யானை போன்ற பெரியதாம் அரசாணையில் கையொப்பமிட மக்கள் ஒப்பம் பெற்ற தலைவா.

மாற்றம் வரும் என்பதில் ஏமாற்றம் கண்டு சீற்றம் கொண்ட தமிழ் நெஞ்சம்-உன்னால் ஏற்றம் பெறக் கெஞ்சும். தரம் என்பது தராசில் மட்டுமல்லோ.உன் ஆட்சியில் அது நிரந்தரம் என்று வெற்றிக்கழக முரசும் கொட்டுமல்லோ. மதம் பிடித்த மத்தியில் நீ சேர்த்து மதம் தனை மனிதமாய் மாற்று.

போதை இல்லா பாதை தனை நீ வழிகாட்டு. திணையளவு கையூட்டு இல்லாத அரசுப்பணிக்கு நீ நகர்த்து. கையளவு உணவூட்டு இல்லாத நிலையை நீ நீர்த்து நிறுத்து. விவேகமே வேகம் என கல்விக்கு நீ சீராட்டுவாய். உன் தொழில்நுட்பத்துடனான திட்டமிடலால், வேலை வந்துவிடும் வேளையென தலைமுறை பலவும் பாராட்டும் பெறுவாய்! இன்று பிறந்தநாள் காணும் தலைவா வாழ்க பல்லாண்டு. தமிழகத்தை நீ ஆண்டு என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தீயாய் வேலையை ஆரம்பித்த விஜய்... தவெக மருத்துவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..!