முறைத்துப் பார்த்ததால்தான் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் வடமாநில இளைஞர் என்பதற்காக தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநில இளைஞர் வேலைக்காக தமிழகத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த விவகாரம் குறித்து ஐஜி அசுரா காருக்கு விளக்கம் அளித்தார். தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சுமார் ஒன்றரை மாதங்களாக அந்த இளைஞர் ரயிலில் பல பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்தார் என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் தமிழகத்திற்கு வேலை பார்ப்பதற்காக வரவில்லை என்று தெரிவித்தார். தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட இளைஞர் இறந்துவிட்டதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட சிறார்கள் மூன்று பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருவர் மட்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருட்டு ஓட்டு வாங்குனீங்களே... வாழ்வதா? சாவதா?... கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்...!
முதற்கட்ட விசாரணை முடிந்து போது நான்கு பேரையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். முறைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடந்தது என்றும் வடமாநில தவறு என்பதற்காக தாக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். வீட்டிலேயே பட்டாகத்தி வைத்திருந்ததாக சிறுவர்கள் கூறியதாக ஐஜி அஸ்ரா கார்க் கூறினார்.
இதையும் படிங்க: ஜன.4,5 ஆம் தேதிகளில் அதிமுக பொதுக்கூட்டம்... "EPS" பங்கேற்பு... முக்கிய அறிவிப்பு...!