நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கிவிஸ் படைக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் 'மெகா' வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆரம்பம் முதலே இந்திய பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை எகிற வைத்த நிலையில், பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் கச்சிதமாகச் செயல்பட்டு நியூசிலாந்தை திணறடித்தனர். இந்த அதிரடி வெற்றியின் மூலம் டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதோடு, ரசிகர்களுக்கு ஒரு செம 'கிரிக்கெட் விருந்து' படைத்துள்ளது.

இந்தப் போட்டியின் ரியல் ஹீரோவாக உருவெடுத்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு கிவிஸ் பந்துவீச்சாளர்களைப் 'பதம்' பார்த்தார். வெறும் 35 பந்துகளில் 84 ரன்களை விளாசித் தள்ளிய அவரது ஆட்டம், ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சதம் அடிக்காவிட்டாலும், இவரது அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் இந்திய அணியின் ஸ்கோரை இமாலய உயரத்திற்குக் கொண்டு சென்றது. 35 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சாய்னா நேவால் ஓய்வு: இந்தியப் பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது!

மறுபுறம், இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கைக் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் 48 ரன்கள் பின் தங்கிய நிலையில் அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் இந்த வெற்றி, வரும் போட்டிகளிலும் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாகா அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிரம்பின் மாஸ்டர் பிளான்: காசா "அமைதி வாரியத்தில்" இணைய இந்தியாவுக்கு அழைப்பு!