கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம் குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் குண்ணத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் அறையின் அருகில் சக்கரம் போல் படம் வரைந்து அதில் முட்டை வைத்து எலுமிச்சம் பழத்தை அறுத்து மஞ்சள் குங்குமம் பூசி வைத்துள்ளனர். மேலும் வைக்கோலால் செய்யப்பட்ட பொம்மை ஒன்று வைத்து மர்ம நபர்கள் நள்ளிரவில் மாந்திரீக வழிபாடு பூஜை செய்து உள்ளதாக தெரிகிறது.
மேலும் பள்ளி முன் பக்கம் நுழைவாயில் கேட் பூட்டுகளுக்கும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து உள்ளனர். இன்று பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை பார்த்துவிட்டு அச்சம் அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: பரபரப்புக்கு மத்தியில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு!! முடிவுக்கு வருகிறதா உக்ரைன் - ரஷ்யா போர்!!
ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள இந்த பள்ளியில் அடிக்கடி இது போன்று பள்ளி வளாகத்தில் பூஜைகள் நடப்பதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளதால், பள்ளிக்கு இரவு நேர காவலர்கள் நியமிக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் மாந்திரீகம் வைத்து வழிபாடுகள் செய்தவர்கள் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி நேரில் சந்திப்பு; குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாட்டம்...!