நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இரவு உணவு சாப்பிட்ட 60 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாந்தி பேதி உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து 21 விதிமுறைகளை பின்பற்ற கல்லூரிக்கு அறிவுரை கல்லூரி 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தனியார்(எக்சல்) கல்லூரியில் கலை அறிவியல் பொறியியல் மற்றும் மருந்தாளுனர் நேச்சுரோபதி, சித்தா உள்ளிட்ட பல்வேறு தரப்பு கல்லூரிகள் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் சூழ்நிலையில், சுமார் 4000 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கல்லூரி நிர்வாகம் கல்லூரியின் மருத்துவமனையிலேயே அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் நலம் பெற்றவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் தங்கராஜ் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கல்லூரி விடுதி சமையலறையில் போதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாதது கண்டு சமையரைக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: 400 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 4 பேர் ஐசியூவில் அனுமதி?.. தனியார் கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?
அதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டிகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் டைல்ஸ்கள் ஒட்டாமல் இருந்தால் குடிநீர்களை உடனடியாக வெளியேற்றி டைல்ஸ் ஒட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 உத்தரவுகளை கொடுத்து அவற்றை சரி செய்த பின்னரே, உணவு சமைக்கவும் குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றவும் அனுமதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்லூரி உணவு விடுதியின் சமையலறை சீல் வைக்கப்பட்டதாலும் குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப்படுவதாலும் மாணவ மாணவிகளுக்கு வருகின்ற 2-11-2025 ம் தேதி வரை கல்லூரிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்
தநிலையில் கல்லூரியில் வாந்தி பேதியின் காரணமாக இரண்டு மாணவிகள் உயிரிழந்ததாக வந்த புரளி காரணமாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபொழுது, கல்லூரி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மாணவர்கள் திங்கள்கிழமை குணமடைத்ததை அடுத்து அவர்கள் பெற்றோர்களை வரவழைத்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், நீர் மற்றும் உணவு இன்றி மற்ற விடுதி மாணவர்களை வற்றிருக்க முடியாது என்பதாலும், தற்பொழுது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுத்த அறிவுரைகள் படி பராமரிப்பு பணிகளுக்காக கல்லூரிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ள நோயாளிகளாக மாணவ மாணவிகள் யாரும் இல்லை என்றும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் இல்ல... அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பதிலடி...!