மனிதநேய மக்கள் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நீண்டகாலமாக இணைந்துள்ள சிறுபான்மையினர் சார்ந்த கட்சி. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இரு தொகுதிகளிலும் மமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த முறையும் அதே எண்ணிக்கையான இரண்டு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்பு மமக பொதுக்குழுவில் ஐந்து தொகுதிகள் கோரியிருந்தாலும், கூட்டணியில் இணைந்துள்ள பல கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திமுக தரப்பு இருக்கும் தொகுதிகளை சமன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மமகவுக்கு முந்தைய எண்ணிக்கை தக்கவைக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி, மனிதநேய மக்கள் கட்சி ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்று ஜவாஹிருல்லா அறிவித்தார். இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா தலைமையிலான குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!! மமகவிற்கு எத்தனை தொகுதிகள்? ஜவாஹிருல்லா பேட்டி..!!
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விருப்பத் தொகுதிகள் குறித்து கூறினார். வாணியம்பாடி, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளை கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெற்றி பெற்ற பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பேசி இறுதி செய்யப்படும் என்று அல்லது நாளைக்குள் பேச்சுவார்த்தை முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் களம்..! திமுக - மமக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!