கலைஞர் மு. கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தமிழ்நாடு முழுவதும் அவரது பங்களிப்புகளையும், திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கருணாநிதி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும், தமிழ் இலக்கியம், திரைப்படத்துறை, மற்றும் அரசியலில் முத்தமிழறிஞராகவும் புகழப்பட்டவர். அவரது நினைவு நாளை ஒட்டி, சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றன.
முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அமைதிப் பேரணி நடைபெற்றது.
இதையும் படிங்க: தூக்கு கயிறோட வந்தாரா? இல்ல அடிச்சு கொன்னுட்டாங்களா? சந்தேகம் எழுப்பிய நயினார்..!

தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மதத்துவி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 7 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார்.
மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர் பாபு, கே என் நேரு, எ.வ. வேலு உள்ளீடோரும், டி ஆர் பாலு, கனிமொழி என பலரும் முதலமைச்ச ஸ்டாலினோடு பேரணியாகச் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகுது! திமுகவில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!