தங்கள் பகுதிகளில் வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ஆபாச வீடியோக்கள்,புகைப்படங்களை எடுத்து அதனை பார்த்து ரசிப்பதற்கு சமூக வலை தளத்தில் தனியாக ஆபாச குழு அமைப்பு. இதில் தன் எதிர் வீட்டு பெண் மற்றும் தன் தாயையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக விடியோ எடுத்து சமூக வலை தள குழுவில் பதிவு செய்த குமரி மாவட்டம் அழக்கபபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன். பாதிக்கப்பட்ட பெண் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார். புகாரின் அடிப்படையில் இளைஞனை கைது செய்த போலிஸார். அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆபாச விடியோக்களை பார்த்து அதிர்ச்சி.இவர்களின் நெட்ஓர்க்கை பிடிக்க தீவிரம்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அழப்பபுரத்தை வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவருக்கு அவரது நண்பர் ஒரு ஆபாச வீடியோவை காண்பித்து, உன் மணைவி குறித்து ஒரு ஆபாச விடியோ சமூக வலை தளங்களில் வந்துள்ளது.இதனை வெளிநாட்டில் வசிக்கும் என் நண்பர் எனக்கு அனுப்பி விட்டு இந்த பெண் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் கணவர் வெளிநாட்டில் வேலை பார்கிறார். ஆகையால் நான் தனியாக வசிக்கிறேன். என்னுடன் செக்ஸ் தொடர்பு வைத்து கொள்ள அணுகவும் என பதிவு போடப்பட்டுள்ளது என்றும் அந்த விடியோவை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்து, இது என் நண்பனின் மணைவி இவர் இரண்டு குழந்தைகளுடன் என் நண்பரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்றும் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என அவரின் கணவர் பார்த்த பொழுது தன் வீட்டிற்கு பின்புறம் வசிக்கும் வீட்டில் உள்ள இளைஞன் எடுத்துள்ளதை பெண்ணின் கணவர் கண்டு பிடித்தார். இது குறித்து தன் மனைவியிடம் கூறியதோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்கள்.
இதையும் படிங்க: “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!
இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை ஆபாசமாக சமூக வலை தளங்களில் பதிவு செய்த இளைஞன் அஜீஸ்( 22) என்பவரை போலிஸார் கைது செய்தார்கள். பின்னர் அவனிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த பதிவுகளை பார்த்த போலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த செல்போனில் ஏராளமான ஆபாச அப்பாவி பெண்களின் ஆபாச விடியோக்கள் இருந்ததோடு அதில் பெரும்பாலானவை பெண்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட விடியோக்கள் என்பதும் தெரிந்தது.
மேலும் இந்த விடியோக்களை கண்டு ரசிப்பதற்கு என தனியாக சமூக வலை தள குழு அமைத்து அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாஞ விடியோக்களை எடுத்து இந்த குழுவில் பதிவு செய்து அதனை ஒருவருக்கொருவர் ரசித்து வந்துள்ளார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த விடியோக்களை பார்த்து சைகோவாக மாறிய இளைஞர்களின் உச்சகட்டமாக கைது செய்யப்பட்ட இளைஞர் தன் தாயை ஆபாசமாக விடியோ (உடை மாற்றும் காட்சியை) எடுத்து அதனையும் இந்த குழுவில் பதிவு செய்துள்ளது மிகவும் கொடூராமானதாக போலிஸாரால் கருதப்படுகிறது.இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனின் நெட்ஓர்க்கை கண்டு பிடிக்கும் பணியில் குமரி மாவட்ட போலிஸார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த செயல் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இப்படியா?... விடிந்ததுமே பால் வாங்கப் போன அலமேலு... கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!