கொடைக்கானலில் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள குணா குகை , தூண் பாறை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய நான்கு சுற்றுலா தளங்களில் தனி தனியாக கட்டணம் வசூலித்து வந்த நிலையில் இன்று முதல் நான்கு இடங்களுக்கும் சேர்த்து ஒரே கட்டணமாக வசூலிக்கபட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது இரண்டாம் சீசன் துவங்குவதற்கு அறிகுறியாக உள்ள காட்டுச் செர்ரி மலர்கள் பூக்கத் துவங்கி உள்ளது.. கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் பூக்கக்கூடிய இந்தக் காட்டுச் செர்ரி மலர்கள் வருட முழுக்க இலைகள் மட்டுமே காணப்படும்... ஆகஸ்ட் மாத இறுதியில் மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து இலைகளுக்கு பதிலாக மரம் முழுக்க ரோஸ் நிறத்திலான பூக்கள் பூக்க துவங்கும்... அவ்வாறு பூக்கும் பூக்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் இறுதிவரை இருந்து வரும் கொடைக்கானல் மலை சாலைகளை அழகாகியும் வருகிறது இந்த காட்டு செர்ரி மலர்கள் ...
சாலைகள் மட்டுமல்லாது நகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் காட்டுச் செர்ரி மலர்கள் உள்ளதால் பசுமை போர்த்திய புல்வெளிகளுக்கு இடையே சிவப்பு கம்பளம் விரித்தார் போன்று பூக்கத் துவங்கியுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அதிரடி ஆஃபரை வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான குணா குகை , தூண் பாறை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய நான்கு சுற்றுலாதலங்களை காண இன்று முதல் (01.09.2026) ஒரே இடத்தில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: MP சசிகாந்த் செந்திலுக்கு தொடர் சிகிச்சை... நேரில் சந்தித்து நலம் விசாரித்த துரை வைகோ...
இதற்கு முன்பு இந்த சுற்றுலா தளங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல நபர் ஒருவருக்கு தலா ரூபாய் 10 வீதம் நான்கு இடங்களில் தனி தனியாக கட்டணம் வசூலித்த நிலையில் தற்போது நுழைவாயில் பகுதியில் நபர் ஒருவருக்கு ஒரே கட்டணமாக ரூபாய் 30 மட்டும் வசூலிக்கபட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக ஒரு பயணிக்கு 10 ரூபாய் வரை மீதமாகும். மேலும் வழக்கம் போல் இந்த பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 50 வழக்கம் போல் வசூல் செய்யபடும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இத்தனை உயிர்கள் போயும் நீட் ஒழியலையே! அனிதாவின் நினைவு நாளில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சீமான்