இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வரதட்சணை கொடுமை என்பது ஒரு ஆழமான சமூகப் பிரச்சினையாக உள்ளது. 1961-ஆம் ஆண்டு வரதட்சணை தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும், இந்த பழக்கம் பல பகுதிகளில் இன்னும் நீடிக்கிறது. திருமணத்தின் போது மணமகளின் குடும்பத்திடம் பணம், நகை, அல்லது பிற பொருட்களை கோருவது மற்றும் அதை பூர்த்தி செய்யாதபோது பெண்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவது வரதட்சணை கொடுமையாக கருதப்படுகிறது.
இதுபோன்ற கொடுமைகளால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் வரதட்சணை தொடர்பான குற்றங்களால் 7,045 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 6,966 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. முனீஸ்வரனுடன் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் ரஞ்சிதா வரதட்சணை கட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையும் படிங்க: வீட்டின் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்து! 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு...
பின்னர் அவரை மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், தனது கணவரும் மாமனாரும் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறி உள்ளார். ரஞ்சிதாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை சீரழித்த காமக்கொடூரன் இவன் தானா? உ. பி. இளைஞரிடம் தீவிர விசாரணை..!