இந்திய அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்குகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர்.
திரைப்பட நடிகையாகவும், அரசியல் தலைவராகவும், மக்கள் தலைவராகவும் தனது தனித்துவமான ஆளுமையால் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அவரது ஆளுமை பல பரிமாணங்களைக் கொண்டது. திறமை, தைரியம், மக்கள் நலன் மீதான அக்கறை மற்றும் உறுதியான தலைமைத்துவம் ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில், ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் பகிர்ந்து இருந்தார். ஜெயலலிதா உடன் பிரேமலதா உள்ளது போன்ற புகைப்படத்தை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் எல்.கே சுதீஷ் பதிவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் தேமுதிக...முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முக்கிய அறிவிப்பு

அரசியல் வட்டாரத்தில் இந்த புகைப்படம் பேசுபொருளாக மாறிய நிலையில், எதற்காக இந்த புகைப்படம் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் எல். கே. சுதீஷ்.
ஜெயலலிதாவுக்கு அடுத்த வலிமை மிகுந்த பெண் தலைவராக பிரேமலதா உள்ளார் என்பதற்காக தான் அந்த புகைப்படத்தை பதிவிட்டதாக தெரிவித்தார். பெண் ஆளுமையின் தலைமையில் இயங்கும் கட்சி தேமுதிக என்பதை உணர்த்துவதாக அந்த புகைப்படம் பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
சிறந்த அரசியல் பெண் ஆளுமை என்ற விருது பிரமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆகஸ்ட் எட்டாம் தேதி சிங்கம் தினம் என்பதால் அதை ஒட்டி சிங்கப் பெண் என குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்ததாக எல்.கே சுதீஷ் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!