மதுரையில் இன்று ஒரு முக்கியமான நாள். தமிழக முதலமைச்சர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. தமிழ் மரபில் தாய்மாமன் குழந்தைக்கு சீர் வழங்கும் வழக்கத்தை அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் இந்தத் திட்டம், தாய் சேய் நலனை மேம்படுத்துவதோடு அரசு மருத்துவமனைகளில் பிரசவம் செய்வதற்கான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழா மேடையில் பங்கேற்று, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து சிறப்பித்தார். சில குழந்தைகளை தன் கரங்களில் ஏந்தி கொஞ்சியபடி மோதிரங்களை அணிவித்தார். தாய்மார்களுடன் உரையாடி அவர்களை வாழ்த்தினார். சில பெற்றோர் குழந்தைக்கு பெயர் சூட்டும்படி கேட்டுக்கொண்டபோது, அவர் அன்போடு அதை ஏற்றுக்கொண்டு பாரம்பரிய முறையில் பெயர் சூட்டினார்.

இந்தக் காட்சிகள் மருத்துவமனையில் கூடியிருந்தவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தின. திட்டத்தின் கீழ் ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகள் பயனடைவர் என்பதால், முதற்கட்டமாக பல குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டன.விழா முடிந்ததும் முதலமைச்சர் விஜய் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்குச் சென்றார். மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அருங்காட்சியகம் ராணி மங்கம்மாள் அரண்மனையாக இருந்த இடத்தில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!
சுமார் பத்து கோடிக்கும் மேற்பட்ட செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அருங்காட்சியகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். சுதந்திரப் போராட்ட வரலாறு, காந்தியின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்நாட்டுப் பயணங்கள் ஆகியவற்றை விளக்கும் காட்சிப்பகுதிகள், டிஜிட்டல் வசதிகள் மற்றும் புதிய அமைப்புகள் அவரின் கவனத்தை ஈர்த்தன.
இதையும் படிங்க: #BREAKING: தாய் மாமனாக மாறிய முதல்வர் விஜய்..! மதுரையில் மாஸ் ஆரம்பம்..! குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்ட CM..!!