திண்டுக்கல்லில் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை, எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசு செயல்படுத்தாததால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகையையும், வழக்குகளின் நன்மைக்கான வைப்பு தொகையாக செலுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளின் தினசரி விற்பனை தொகையும், திண்டுக்கல் நிலம் கையப்படுத்தல் மறுசீரமைப்பு வழக்குகளின் தன்மையை கருத்தில் கொண்டு வைப்புத் தொகையை செலுத்த மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு பலமுறை காலஅவாசம் வழங்கியும் இழப்பீட்டை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததால் மதுரை அமர்வு இந்த உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். திண்டுக்கல்லை சேர்ந்த முத்து கல்யாணி , சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட திண்டுக்கல் பகுதியில் தங்களது கடைகள் அமைந்த இடத்தை 2017 ஆம் ஆண்டு கையப்படுத்தியதற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில் குறைக்கப்பட்ட தொகையை வழங்க கோரி, 2019 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்க செய்திருந்தனர்.
இதையும் படிங்க: பத்து ரூபா பாலாஜி… CBI வந்தா CONDITIONS FOLLOW பண்ணுவீங்களா? கிண்டலடித்த அதிமுக…!
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு 4 கோடி 37 லட்சத்து 4 ஆயிரத்து 233 இழப்பீட்டு வழங்க உத்தரவிட்டது. அதனை எதிர்த்து அரசு தரப்பில் 2023 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் குறைக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை எட்டு வாரங்கள் வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருக ராமகிருஷ்ணன் அமர்வு ஜூலை 28, ஆகஸ்ட் 26, செப்டம்பர் 1 உள்ளிட்ட நான்கு முறை வழக்கு விசாரணை ஒத்திவைத்தது.
தற்போது அரசு தரப்பு உத்தரவை நிறைவேற்றவில்லை அல்லது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யவோ இல்லை. எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மொத்த பணத்தையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வங்கி கணக்கில் செலுத்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர். உத்தரவு நகலை பெற்ற நாளில் இருந்து மறு உத்தரவு வரும் வரை திண்டுக்கல்லில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தினசரி வசூலாகும் தொகையை நீதிமன்ற வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மொதல்ல குடிக்கு முடிவு கட்டுங்க... அப்புறம் பேசலாம்... முதல்வரை விமர்சித்த தமிழிசை...!