உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய திட்டம். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு சேவைகளையும் திட்டங்களையும் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்வதாகும். இதன் மூலம், பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாடி செல்லாமல், தங்கள் பகுதிகளிலேயே குறைகளை தெரிவித்து தீர்வு பெற முடியும். தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவை ஜூலை 15, முதல் நவம்பர் 30, 2025 வரை பல கட்டங்களாக நடைபெறுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகள் மூலம் 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த முகங்களில் பெரும்பாலும் மகளிர் உரிமை தொகைக்காக தான் பெண்கள் வருகை தருவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக மனந்திறந்தி மகள் இருக்க உரிமை பவே கொடுப்பதாக இருந்தால் 50 மாத நிலுவைத் தொகையை முதலில் வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் எனப் போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து, பலமுறை, நாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படமால் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்பு, கடந்த 2023 செப்டம்பர் மாதம் தான் அதைச் செயல்படுத்தியதாக கூறினார். அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றியது திமுக என்றும் இதனால், தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்படியிருக்க, தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை திமுக அரசு தொடங்கியுள்ளதாகவும் கூறினார். முன்பு தகுதி இல்லை எனக் கூறி நிராகரித்த நிலையில், இப்போது மட்டும் எப்படி தகுதி வந்தது என நமது சகோதரிகள் கேள்வி எழுப்புவதாகவும் சுட்டிக்காட்டினார். அப்படிக் கொடுக்க திமுக அரசு முடிவு செய்தாலும் தமிழக பெண்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் அதிருப்தி குறையப் போவதுமில்லை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றிக்கு எதிர்ப்பு! நயினார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை..!
உண்மையில் திமுக மனம் திருந்தி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க விரும்பினால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட 50 மாத நிலுவை தொகையான 50,000 ரூபாயை முதலில் வழங்க வேண்டும் என்றும் அதுதான், திமுக அரசால் ஏமாற்றப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் நியாயமாக அமையும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டிக்கரில் கவனம் செலுத்தி செயலில் கோட்டை விட்ட திமுக! முதல்வர் மருந்தகத்தை விமர்சித்த நயினார்..!