சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ரவுடிகள் மீண்டும் அதிகரிப்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை கோட்டத்தில் மானாமதுரை, சிப்காட், திருப்புவனம், , பழையனூர், பூவந்தி ,கீழடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் மானாமதுரைக் கோட்டம் அமைந்துள்ளது. நான்கு வழி சாலையை ஒட்டி மானாமதுரை கோட்டம் அமைந்திருப்பதால் கடத்தல் சம்பவங்களும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
மானாமதுரை கோட்டத்தில் திருப்புவனம் அஜித் குமார் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி சண்முக சுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதையும் படிங்க: மக்கள் தத்தளிக்கிறது தெரியுதா?... தமிழக பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு தவெகவை வறுத்தெடுத்த அதிமுக மாஜி...!
மானாமதுரை ஆகாஷ் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .தொடர்ச்சியாக ஒரு ஆண்டில் 16 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் போலீசார் பணியில் தயக்கம் காட்டுகின்றனர்.
மானாமதுரை கோட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி காவல் நிலையங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகம் பதிவாகும். கடந்த ஒரு வருடமாக போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் போலீசார் குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தயக்கம் காட்டி வருகின்றனர் . மணலூரில் 126 பவுன் தங்க நகை கொள்ளை உட்பட பல்வேறு திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவே இல்லை .
இரவு நேரத்தில் எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் ரோந்து பணிக்கு செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். கீழ்மட்ட போலீசார் மட்டுமே ரோந்து பணிக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணிக்கு சென்ற கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு போலீசார் கடுமையாக தாக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவே இல்லை .
இதே போல மானாமதுரை அருகே அதிகரை கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய சென்றபோது சிறப்பு எஸ்ஐ சுரேஷ், ஏட்டு ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவே இல்லை.
தொடர்ந்து குற்றவாளிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் குற்றவாளிகள் தைரியமாக வலம் வருகின்றனர். பட்டாகத்தி உடன் ரீல்ஸ் போடுவது, வன்முறை காட்சிகளுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது போன்று தொடர்ந்து ஈடுபட்டு மிரட்டி வருகின்றனர். எனவே மானாமதுரை கோட்டத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பாச்சேத்தி சேர்ந்த முருகப்பா கூறுகையில் தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது , உயர் அதிகாரிகள் இரவு நேரத்தில் ரோந்து செல்லாததாலும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வண்ண உள்ளன. குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார் .எனவே மாவட்ட காவல்துறை மானாமதுரை கோட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!