சிவகாசி அருகே கண்மாய் பட்டியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, முதல்வர் விஜய் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக செய்து வருகிறார்.
2500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை முதல்வர் விஜய் வெகு விரைவில் வழங்குவார் என தெரிவித்துள்ளார். 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை இறந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது, முறையான வங்கி கணக்கு இணைக்கப்படாமலும் பல்வேறு குளறுபடிகள் இருந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் வழங்கியதால் மக்கள் முழுமையாக பயனடையவில்லை என்றும் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக கிடைக்காத மக்கள் பலரும் மனு அளித்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மக்களுக்கு முழுமையாக பயனடைய செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அதற்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, அதன் காரணமாகவே மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தபால் வாக்கை வாங்கினோமா.? மரகதம் குமரவேலை விளாசிய பரந்தாமன்..!!
முதல்வர் நிச்சயமாக அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவார் என கூறினார். இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் தனுஷ் உட்பட யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?