வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்தது. இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை மறுநாள் மோன்தா புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் அதிதீவிர புயலாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் வருவாய் பேரிடர் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 24ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தினார். புயல் உருவாகுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் SAFETY ரொம்ப முக்கியம்... பருவமழை தீவிரம்..! முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை...!
நீர்வளத் துறை பேரிடர் துறையுடன் இணைந்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மூன்று மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை உள்ளது எனவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், நெல் சேதம் குறித்து கணக்கெடுக்கும்படி நடைபெற்ற வருகிறது என்றார்.
இதையும் படிங்க: ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட எழில்மிகு தொல்காப்பியர் பூங்கா... முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு..!