சென்னையின் அடையார் ஆறின் கரையில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்கா, இன்று நகரத்தின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் இடமாகத் திகழ்கிறது. இது வெறும் பூங்கா மட்டுமல்ல. இயற்கை சமநிலையை மீட்டெடுக்கும் ஒரு பெரிய முயற்சியின் விளைவாகும். முன்பு கட்டிடக் கழிவுகள், அழுக்கடுப்பிடம் மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இந்த 58 ஏக்கர் பரப்பளவு நிலம், இன்று பசுமையான காடுகள், ஈரநீர்நிலைகள் மற்றும் பறவைகளின் இடமாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டு அரசின் தூண்டுதலால் உருவான இந்தப் பூங்கா, தமிழின் பெரும்புலவரான தொல்காப்பியரின் பெயரால் அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் பூங்காவின் பயணம் 2005ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு, 60 கோடி ரூபாய் நிதியுடன் இந்தத் திட்டத்தை அறிவித்தது.

அடையார் கிரீக் ஈக்கோ பார்க் லிமிடெட் என்ற சிறப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டு, நிதி மேலாண்மையைப் பொறுப்பேற்றது. 2006ஆம் ஆண்டு அக்டோபரில் அடையார் பூங்கா டிரஸ்ட் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்பட்டு, மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டது. அந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி, திறந்துவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேலைய கச்சிதமா முடிங்க... களத்தில் இறங்கிய முதல்வர்... அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு...!
தற்போது 42.45 கோடி இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பியர் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சின்னதா தான் முளைச்சு இருக்கா? அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு... ஃபெயிலியர் மாடல் DMK... இபிஎஸ் விமர்சனம்...!