தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெயர்ந்து கொண்டிருக்கும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த மழைக்கால சவாலுக்கு முன்னதாகவே தமிழக அரசு தீவிரமான தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு, உடனடி உதவி மற்றும் நீண்டகால தடுப்பு நெறிகளை உள்ளடக்கியவை.

மழை நீர் தேங்காாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள், மீட்பு பணிகள், நிவாரண பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். மழையின் தீவிரத்தை உணர்ந்து, அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு தெளிவான உத்தரவுகளை வழங்கியுள்ளது. இந்த நிலையில், வடகிழக்க பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட எழில்மிகு தொல்காப்பியர் பூங்கா... முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு..!
பல்வேறு மாவட்டங்களில் மழை நிலவரம், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வேலைய கச்சிதமா முடிங்க... களத்தில் இறங்கிய முதல்வர்... அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு...!