திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். பயந்தாங்கொள்ளி பழனிசாமியும், முதுகெலும்பில்லாத அதிமுக கோழைகளும் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் அடிபணியலாம் ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ ஒருகாலமும் துரும்பளவு கூட யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என கூறினார்.

தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்., டாஸ்மாக் நிறுவன விசாரணைக்கு பயந்துதான் கூட்டத்தில் பங்கேற்றதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் ’பயம்’ பற்றியெல்லாம் ’கோழை’ பழனிசாமி பேசலாமா? எனவும் பாஜகவோடு நேரடிக் கூட்டணி இல்லாமல் கள்ளக் கூட்டணி காலத்தில்கூட பாஜகவுக்குப் பயந்த பயந்தாங்கொள்ளிதானே பழனிசாமி என்றும் சாடினார்.
இதையும் படிங்க: மக்கள் விரோத திட்டங்களை கைவிடுங்கள்..! ஜூன் 2ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

அதிமுகவின் தீர்மானங்களில் கூட மோடியையோ ஒன்றிய அரசையோ கண்டிக்காமல் வலியுறுத்துகிறோம் என்ற வார்த்தையைப் போட்டுத் தப்பித்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி., பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், தேர்தல் ஆணையம் பயம், இரட்டை இலை சின்னம் பயம். இப்படி எல்லாவற்றுக்கும் பயந்து பாஜகவோடு கூட்டணி சேர்ந்தவர்தான் பழனிசாமி என்று கூறினார்.

பாஜகவோடு வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என வீராவேசமாகப் பேசிய பழனிசாமி, தன் குடும்பத்திற்குப் பாதிப்பு என்றதும் டெல்லிக்கு ஓடிச் சென்று அமித்ஷாவின் காலடியில் அதிமுகவை அடகு வைத்தார் என கூறிய சேகர்பாபு, யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்’ எனப் பாரதியாரின் வார்த்தைகளைப் போல நாங்கள் பா.ஜ.க.வின் அடக்குமுறைகளை துணிந்து எதிர்த்து நிற்கிறோம்., பழனிசாமியைப் போல டெல்லி எஜமானுக்குப் பயந்து, அமித்ஷா வீட்டுக்குப் போக பல கார்களில் பதுங்கிப் போன பயந்தாங்கொள்ளி பழனிச்சாமி அல்ல நாங்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: வக்கு இருந்தா "யார் அந்த தம்பி"னு சொல்லுங்க.. ஸ்டாலினை டார் டாராக கிழித்த இபிஎஸ்..!