சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி 11 பேர் பலியானார்கள் 43 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் உத்தரவின் பேரில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். முன்னதாக காரைக்குடி மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, நலம் விசாரித்தனர்.
மேலும் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களை, நலம் விசாரித்தனர். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 5 உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூன்று உடல்களை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அமைச்சர் சிவசங்கரன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதலமைச்சரின் உத்தரவுப்படி முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுதுறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் கூறுகையில் : விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆங்காங்கே பல்வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . தகவல் அறிந்த முதலமைச்சர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களையும் என்னையும் நேரடியாக சென்று ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் .
இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!
உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறியுள்ளார் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் மூன்று லட்சம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார் எனக்கூறினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில், அரசு பேருந்துகள் விபத்து சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது - விசாரனை முடிவில் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார். விபத்துக்கள் நடக்காமல் தடுக்க சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்துக்கு பேருந்துகள் பராமரிப்பு பிரச்சனை இல்லை. ஏனென்றால் இரண்டு பேருந்துகளும் புதிய பேருந்துகள் என்றும், விபத்து சம்பவத்தில் தவறுகள் நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வருடத்தின் கடைசி மாதம்.. வந்தது ஹேப்பி நியூஸ்..!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!!