பொங்கலுக்கு முதன்முறையாக 4 முழம் வேட்டி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் விஜய் பாலாஜி நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். நெசவாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் திட்டம் இருப்பதாக கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், கைத்தறி மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். நெசவாளர்களின் உற்பத்தி, சங்கத்தின் செயல்பாடுகள், உற்பத்தி திறன் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, தென் மாவட்டங்களில் நெசவாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: "மியாவ்"...! "மியூட் மோட் காரியவாத பூனை திமுக"..! காவிரி விவகாரத்தில் விளாசிய தவெக..!!
இதுதொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் 4 முழம் வேட்டிகள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். இதுவரை பொங்கல் பண்டிகையையொட்டி 8 முழம் பாலிஸ்டர் மற்றும் பருத்தி வேட்டிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக 4 முழம் வேட்டிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெட்ரோவை மட்டும் பார்க்காதீங்க... மேட்டூரையும் பாருங்க! முதலமைச்சருக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!