நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை என்று நிதியமைச்சர் தெரிவித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றும் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும் தெரிவித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அப்படி அதனை யாரும் பறிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு..! தி.நகர் தவெக வேட்பாளர் ஆனந்த் வாக்குறுதி..!!
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினின் சவாலை ஏற்று ஊக்கத்தொகை சர்ச்சை எழுந்ததால் மத்திய அரசு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த நிலையில், தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது என்றும் சாடியுள்ளார்.
மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவே இதற்கு சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விசிலு ஜெயிக்கணும்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக மருமகள், பேரன் தீவிர வாக்கு சேகரிப்பு..!