சென்னையின் சாலைகளில் ஒரு காலத்தில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்துகள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் தோன்ற உள்ளன. இம்முறை அவை முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் நவீன வடிவில் வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இது நகரின் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளின் வரலாறு 1970களுக்கு முந்தையது. அப்போது இவை நகரின் அடையாளமாக விளங்கின. 1980களில் சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இவை, 1997இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

ஆனால், போக்குவரத்து நெரிசல், மேம்பாலங்கள் கட்டுமானம் போன்ற காரணங்களால் 2008இல் இவை முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு பல ஆண்டுகளாக இவற்றைப் பார்க்க முடியவில்லை. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மீண்டும் வருகின்றன என்பது சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த முறை இவை மின்சார பேருந்துகளாக வருவதால், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: சிறு தீங்கு நிகழ்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு... ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு EPS கண்டனம்...!
முதற்கட்டமாக 20 மின்சார டபுள் டெக்கர் பேருந்துகள் வாங்கப்படுகிறது. சென்னை போக்குவரத்து கழகம் இதற்கான டெண்டர் வழங்கி உள்ளது. ஏற்கனவே 2023இல் இதுபோன்ற ஒரு பேருந்தின் சோதனை ஓட்டம் சென்னை சாலைகளில் நடத்தப்பட்டது. அது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனிடையே, டபுள் டக்கர் பேருந்து சேவையை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன், பேருந்துகளின் தரம், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். என்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இயக்கப்படும் டபுள் டக்கர் பேருந்து சேவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஜன.1 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!