பணி நிரந்தரம், தனியார் மையமாக்குதலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற சமூக முடிவு ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை அடுத்து தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. கலைந்து செல்ல மறுத்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். பல மணி நேரம் அடைத்து வைத்திருந்து பின்பு விடுவிக்கப்பட்டனர். தமிழக அரசு தங்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை என்றும் திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் காவல்துறை அராஜக போக்குடன் செயல்படுவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தைப் பார்த்தது, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் பின்னணியில் பெரும் விமர்சனத்தை எழுப்பியது. இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒருபுறம் கூலி பாடம் பார்த்து கொண்டே மறுபுறம் தூய்மை பணியாளர்களை அத்துமீறி அப்புறப்படுத்தியுள்ளார் ஸ்டாலின் எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 ஓட்டு.. பதில் சொல்வாரா ஸ்டாலின்? பகீர் கிளப்பிய பாஜக..!

ஸ்டாலின் என்ற மனிதனின் மனதில்,எங்கள் மக்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்று கேள்வி எழுப்பினார். தூய்மை பணியாளர்களை அடித்து துரத்திய ஸ்டாலின்., உங்களை விரட்டுகின்ற நேரமும் காலமும் வெகுதூரம் இல்லை என்று சாடினார். 13 நாட்களாக போராடியவர்களை ஒரு 10 நிமிடம் பார்க்க நேரம் இல்லை.,ஆனால் 3 மணி நேரம் கூலி படத்திற்கும், மோனிகா பாட்டுக்கும் வைப் செய்ய நேரம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.
நீங்கள் தற்போது அடித்து சிறையில் தள்ளப்பட்ட மக்கள் தான் உங்களை அதிகாரத்தில் அமர வைத்தவர்கள் என்றும் இனி குப்பையை போல உள்ள உங்கள் பாசிச அரசை அவர்களே அகற்றி எறிவார்கள் என்றும் கூறினார். நம்புங்கள். இன்று நாம் நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு நன்றி கூறிய தூய்மை பணியாளர்கள்! எப்போதும் துணை நிற்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..!