2023 டிசம்பர் 28 அன்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைந்தபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறுவதாக ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார். இது இரு தலைவர்களிடையே அரசியல் மாண்பை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசிடம் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!
இந்தக் கோரிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நேரடியாக விடுக்கப்பட்டது, இது அரசியல் மரியாதையின் அடிப்படையில் ஒரு தொடர்பை வெளிப்படுத்துகிறது.

தேமுதிக பொதுவாக அதிமுக அல்லது பாஜக கூட்டணிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது, ஆனால் இந்த முறை தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக பொருளாளர் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரேம்ல தான் விஜயகாந்த் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அப்பப்பா... மக்கள் மேல ரொம்ப தான் அக்கறை..! திமுகவை பந்தாடிய ஓபிஎஸ்..!